தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா காமக்காப்பட்டியில் உள்ளது கூலுராவுத்தர் ஓடை. இதனை ஆக்கிரமித்து சிலர் மா, தென்னை விவசாயம் செய்து வந்தனர். இதனால் ஓடையின் நீர்வழிப் பாதையின் பரப்பளவு குறைந்தது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற விவசாயி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்
தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஓடையை பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
அதன்படி இன்று வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் கூலுராவுத்தர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பணியின்போது, பிரச்னைகள் வராமல் இருக்க, பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.
பணியின் போது பிரச்னை ஏற்படுத்தும் வகையில் பேசியவர்களை காவல் துறையினர் சமாதானம் செய்தனர். பின், 20 ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஓடை பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க : மேகதாது அணைக்கு அனுமதி கூடாது - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்