உதகை: முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியிலிருந்து மசினகுடி செல்லும் சாலையில் இரண்டு காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன.
இரு காட்டு யானைகளும் சண்டையிட ஆக்ரோஷமாக இருந்தன. இதனால் மசினகுடிக்கு செல்லும் வாகனங்களும் மசினகுடியில் இருந்து உதகை நோக்கி வரும் வாகனங்களும் இருபுறமும் நிறுத்தப்பட்டன.
நீயா நானா என்று தோனியில் இரு யானைகள் நடுரோட்டில் சண்டையிட தயாரானதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
சுமார் அரை மணி நேரம் சாலையில் இருந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்கு சென்ற பிறகு வாகன ஓட்டிகள் நிம்மதியுடன் சாலையை கடந்து சென்றனர்.
இதையும் படிங்க: VIDEO; கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு