ETV Bharat / state

உணவு மற்றும் தண்ணீருக்காக சாலையில் உலா வந்த காட்டு யானைகள்! - Nilgiris District News

நீலகிாி: குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உணவு மற்றும் தண்ணீருக்காக குட்டியுடன் சாலையில் காட்டுயானைகள் உலா வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உணவு மற்றும் தண்ணீருக்காக குட்டியுடன் சாலையை கடக்கும் காட்டுயானைகள்

author img

By

Published : Aug 4, 2020, 7:45 PM IST

நீலகிாி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பலாப்பழம் சீசன் தொடங்கியதால், காட்டு யானைகள் அங்கு கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளது. மேலும் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக காட்டு யானைகள் சாலைகளுக்கு வருகிறது.

இந்நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், இச்சி மரம் அருகே சாலையைக் கடப்பதற்காக குட்டியுடன் காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வனத்துறையினா் விரைந்து வந்து, சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினர். பின் காட்டு யானைகள் சாலையைக் கடந்த பிறகே, வாகனங்களை செல்ல அனுமதித்தனா்.

உணவு மற்றும் தண்ணீருக்காக குட்டியுடன் சாலையை கடக்கும் காட்டுயானைகள்

இதனால் அந்தப் பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மேலும் காட்டுயானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுத்து, அதனை தொந்தரவு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என குன்னூர் வனச்சரகா் சசிகுமாா் எச்சாிக்கை விடுத்துள்ளாா்.

இதையும் படிங்க: சாரல் மழை: குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.