நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை பகுதிகளில் 11 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாகவும், இந்த யானைகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து உணவு, நீரைத் தேடி ஊருக்குள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
"கடந்த இரண்டு நாள்களாக புதுக்காடு ஆதிவாசி கிராமத்தில் குட்டியுடன் மூன்று யானைகள் உலாவருகின்றன. தற்போது, இங்கு பலாப்பழம் பருவம் களைகட்டியுள்ள நிலையில் அவற்றை யானைகள் உட்கொண்டுவருகின்றன.
தொடர்ந்து அருகில் உள்ள ஆற்றிக்குச் சென்று நீரை அருந்தி, மீண்டும் கிராமத்துக்கு வருகிறது. கிராமத்திற்குள் வந்த யானைகள் எந்தப் பாதிப்பையும் இதுவரை ஏற்படுத்தவில்லை.
எனினும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இங்கு வனத் துறையினர் ஆய்வுசெய்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்" என ஆதிவாசி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'வடுகபட்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடந்த 9 மயில்கள்'