ETV Bharat / state

தொடர்ந்து உயிரிழக்கும் காட்டுப்பன்றிகள் - விளக்கம் தருகிறார் கள இயக்குநர் - காட்டுப் பன்றி

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு பன்றிகளுக்கு பரவி வரும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் மனிதர்களுக்கோ மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் அச்சபட தேவையில்லை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 5, 2023, 5:52 PM IST

Updated : Jan 5, 2023, 6:13 PM IST

முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் வெங்கடேஷ்

நீலகிரி: கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து உயிரிழந்த நிலையில் கடந்த 10 நாட்களாக முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் சுற்றித் திரிந்த 20-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.

இதனைத்தொடர்ந்து உயிரிழந்த பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பியதில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் பரவல் காரணமாக இறந்திருப்பது உறுதியானது. இதனையடுத்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் வனத்துறை அதிகாரிகள் தெப்பக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார வனப்பகுதியில் காட்டுப்பன்றி உயிரிழந்துள்ளதா என சோதனை மேற்கொண்டனர். இதில் 26 காட்டுப் பன்றிகள் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து உயிரிழந்த பன்றிகளின் உடல் அங்கேயே தீயிட்டு எரிக்கப்பட்டது.

இதுகுறித்து முதுமலைப் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் வெங்கடேஷ் கூறுகையில், 'முதுமலைப் புலிகள் காப்பகத்தில் காட்டுப்பன்றிகளுக்கு பரவி வருவது ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் மனிதர்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் அச்சபடத் தேவையில்லை. வனப் பணியாளர்கள் குழுக்களாக சென்று வனப்பகுதியில் உள்ள புதர்களில் காட்டுப்பன்றி உயிரிழந்துள்ளதா என சோதனை செய்து வருகின்றனர்.

தெப்பக்காடு பகுதியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளதால் அதற்குள் காட்டுப் பன்றிகள் வராமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்த பன்றிகள் அங்கேயே தீயிட்டு எரிக்கப்படுவதால், மற்ற பன்றிகளுக்கு வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை. முதுமலை வனப்பகுதியினை ஒட்டியுள்ள இடங்களில் வளர்ப்புப் பன்றிகள் இல்லாததால் அது மற்ற இடங்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை' எனத் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் அம்ரித்

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் கூறுகையில், 'கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள வளர்ப்பு பன்றி பண்ணைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் குறித்து மத்திய கால்நடை பராமரிப்புத்துறை காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளனர்' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: vandalur zoo: உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒப்பந்த ஊழியர்கள்!

Last Updated : Jan 5, 2023, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.