ETV Bharat / state

வெலிங்டனில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடக்கம்! - Wellington Cantonment Sewer Project started

நீலகிரி: குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியத்தில் ரூ.50 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வெலிங்டனில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆரம்பம்

author img

By

Published : Oct 3, 2020, 6:44 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியத்தில் ஐந்தாயிரம் குடும்பங்கள் உள்ளன.

இங்கு 2019ஆம் ஆண்டு துாய்மை இந்தியா திட்டத்தில் ரூ.50 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு காரணங்களால் கால தாமதம் ஏற்பட்டது. தற்போது அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் கண்டோன்மெண்ட் வாரிய அலுவலகம் அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

இன்னும் இரண்டு ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெற வாய்ப்புள்ளதாக கண்டோன்மெண்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'ஆவடியில் 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் நவம்பருக்குள் முடியும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.