இந்தியாவின் எல்லைப் பகுதிக்குட்பட்ட கார்கிலில் 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்திய ராணுவம் பெற்றது. இந்த வெற்றியை விஜய் திவாஸ் என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 20ஆம் தேதி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் சார்பில் ’விஜய் திவாஸ்’ ஆறு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒருபகுதியாக வெலிங்டன் கண்டோன்மென்ட் மைதானத்தில் இன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில், பள்ளி மாணவ-மாணவிகள் கார்கில் போர் குறித்து தத்ரூபமாக நடித்துக்காட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.