நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற உறுப்பினர்கள் சேர்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞரணிதான் முக்கியம். ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில் 30 லட்சம் இளைஞர்ளை தமிழ்நாடு முழுவதும் இணைப்பதுதான் நம் லட்சியம்.
இளைஞரணியில் ஆர்வத்தோடு பணியாற்றினால் தாய் கழகத்தில் சிறப்பாக இருக்கலாம். இளைஞரணி கூட்டங்களில் தயவு செய்து யாரும் பட்டாசுகளை வேடிக்க வேண்டாம். அதனால் எந்த பயனும் இல்லை.
அதேபோல், எனக்கு இளைய தளபதி, இளம் தலைவர் என்றெல்லாம் பெயர் வைத்து அழைக்க வேண்டாம். இளைஞரணிச் செயலாளர் என்ற பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதுவே போதும்” என்றார்.