உதகை: இரியோடைய கோயிலில் சோலூர், கோட்டட்டி, தட்டனேரி உள்ளிட்ட கிராம மக்கள் ஆண்டுதோறும் அறுவடை திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று (ஜூலை 23) தொடங்கியது.
இதனையொட்டி அங்குள்ள இரியோடைய கோயிலில் நேற்று (ஜூலை 23) இரவு கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். அப்போது மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் பயன்படுத்தபட்டுள்ளது. இதில் 5 பேர் ஜெனரேட்டர் வைக்கபட்டுள்ள பஜனை கூடத்திற்குள் சென்று தூங்கியுள்ளனர். கடும் மழை காரணமாக ஜன்னல்களை அவர்கள் மூடியுள்ளனர். அப்போது ஜெனரேட்டரில் இருந்து வெளியான புகையால் அவர்களுக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் உடனடியாக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சுபாஷ் (36), மூர்த்தி (49) ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அஜித்குமார் (25), ரதீஷ் (21), விக்னேஷ் (27) ஆகியோர் மயங்கிய நிலையில் உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டனர். அவர்கள் 3 பேரும் மேல் சிகிச்சைகாக கோயம்புத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.
இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி மாணவி பாலியல் வன்புணர்வு- போக்சோவில் இளைஞர் கைது