ETV Bharat / state

இறந்த யானையைப் புதைத்த இருவர் கைது

நீலகிரி கோத்தகிரி அருகே மின்சாரம் தாக்கி இறந்த யானையை யாருக்கும் தெரியாமல் புதைத்த இருவரை வனத் துறையினர் கைதுசெய்தனர்.

இறந்த யானையை புதைத்த இருவர் கைது
இறந்த யானையை புதைத்த இருவர் கைது
author img

By

Published : Sep 27, 2021, 6:46 AM IST

நீலகிரி: கோத்தகிரி வனச்சரகத்திற்குள்பட்ட கெங்கரை ஊராட்சி மெட்டுக்கல் வனப்பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மின்சாரம் தாக்கி பெண் யானை ஒன்று இறந்தது. இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல், சிலர் யானையைப் புதைத்தனர்.

இந்த விவகாரம் குறித்து வனத் துறையினருக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று (செப். 24) ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நீலகிரி மாவட்ட உதவி வன அலுவலர் சரவணகுமார், கோத்தகிரி வனச்சரகர் சிவா ஆகியோர் தலைமையில் வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

வனத் துறை நடவடிக்கை

விசாரணையில் மெட்டுக்கல் ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த மோட்டான் என்பவரது மகன் ஈஸ்வரன் (40), சரவணன் என்பவரது மகன் காட்டுராஜா (27), சுப்ரமணி என்பவரது மகன் நிதிஷ்குமார் (24) ஆகியோர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானது. இந்த மூன்று பேரில் நிதிஷ்குமார் இறந்துவிட்டார். மற்ற இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

யானையை புதைத்த இருவர்
யானையைப் புதைத்த இருவர்

இதனைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் வேல் மயில், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், உதவி கால்நடை மருத்துவர், வனத் துறையினர் முன்னிலையில் யானை புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்குச் சென்று யானையின் எலும்புகள் சேகரிக்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இதனையடுத்து குற்றவாளிகள் இருவரையும் வனத் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: கோவையில் யானை தாக்கி விவசாயி படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.