ETV Bharat / state

சினிமா பிரபலங்களை மிஞ்சிய பொம்மன் - பெள்ளி: செல்பி எடுக்க சுற்றுலா பயணிகள் போட்டாபோட்டி! - சினிமா பிரபலங்கள்

முதுமலை யானைகள் முகாமிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி பொம்மன் - பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து உரையாடினார். இந்நிலையில் முதுமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவர்கள் பொம்மன் -பெள்ளி ஆகியோரை தேடிச்சென்று புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 10, 2023, 5:59 PM IST

பொம்மனிடம் செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள்

நீலகிரி: முதுமலை யானைகள் முகாமில் கிராமப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் பயிற்சி பெற்ற கும்கி யானைகள், தாயைப் பிரிந்து பரிதவிக்கும் நிலையில் மீட்கப்படும் குட்டி யானைகள் உள்ளிட்டவை முதுமலை யானைகள் முகாமில் வைத்து பாரமாக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய யானைகளை தங்களது குடும்பத்தின் ஒரு உறுப்பினர்களாகக் கருதி அன்பையும், அக்கறையும் காட்டி பாகன்களும் அவர்களது குடும்பத்தினரும் வளர்த்து வருகின்றனர். அவர்களில் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி ஆகியோர் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.

தாயைப் பிரிந்து உடம்பில் பல காயங்களுடன் இருந்த ஆண் குட்டி யானைக்கு ரகு எனப் பெயரிட்டு பொம்மனும், அவருக்குத் துணையாக வரும் பெள்ளியும் வளர்த்து வந்தனர். மேலும் ஆசனூர் வனப்பகுதியில் மிகவும் பலவீனமாக நிலையில் மீட்கப்பட்ட அம்மு என்ற குட்டி யானைக்கு பொம்மி எனப் பெயரிடப்பட்டு, அந்த யானையையும் பராமரிக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.. பேருயிரான யானைகள் மீது பேரன்பைக் கொட்டி இருவரும் வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் பொம்மனும், பெள்ளியும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனை மையமாக வைத்து பழங்குடிகளின் வாழ்வியலையும், அவர்களுக்கும் யானைகளுக்கும் இருக்கும் உறவையும் உணர்வுப்பூர்வமாக எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் பதிவு செய்திருந்தது. இந்த படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் சிறந்த ஆவணப்படம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியது.

இதையடுத்து அப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளி ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொம்மன் - பெல்லியை ஆகியோரை வாழ்த்திப் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதுமலை யானைகள் முகாமிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து உரையாடினார்.

இதன் காரணமாகப் பொம்மன், பெள்ளி இருவரும் பிரபலமாகியுள்ளனர். இந்நிலையில் முதுமலைக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவர்கள் பொம்மன், பெள்ளி ஆகியோரை தேடிச்சென்று புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகளும் அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர். சினிமா பிரபலங்களுடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டும் இளைஞர்கள் பொம்மன்-பெள்ளியுடன் புகைப்படங்கள் எடுக்க ஆர்வம் காட்டுவதால் முதுமலை யானைகள் முகாமிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனிடையே ஈடிவி பாரத்திற்குப் பேட்டி அளித்த பொம்மன், "பிரதமரை நேரில் சந்தித்தவுடன் என்ன பேசுவது என்றே தெரியவில்லை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுடைய குறைகளைக் கேட்டு அறிந்தார். இங்குள்ள யானை பாகர்களுக்குத் தங்குவதற்கு வீடும், குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் மற்றும் அவர்கள் உயர்கல்வி பயில லேப்டாப், ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். பிரதமர் ஆவணப்படம் குறித்துக் கேட்டறிந்தார்" என பொம்மன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க தனி தீர்மானம்.. அதிரடியில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.