தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக உதகை, குன்னூர் பகுதிகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களான கேரளா, கர்நாடகத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகைதந்தனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் வாடகை வாகன ஓட்டுநர்கள், கடைகளில் கூட்டம் அலைமோதியது.
மேட்டுப்பாளையம் - ஊட்டி பகுதியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மலை ரயிலில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர். சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்துக் காவலர்களைப் பணி அமர்த்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சாலை வசதியை சீர் செய்துதர வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நீராவி எஞ்சின்: குன்னூர்-உதகை இடையே சோதனை ஓட்டம்