நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது,
சமீபகாலமாக கலப்பட தேயிலை தூள் பயன்பாடு சில இடங்களில் அதிகரித்து வருவதாக புகார் வருகின்றன. குறிப்பாக, சுற்றுலா மைய பகுதிகளில் தேயிலை தூளின் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த கலப்படத் தேயிலைத் தூளை உபயோகிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி, பல்வேறு வியாதிகளும் உண்டாகிறது. இதுகுறித்து, தேயிலை வாரிய அலுவலர்கள், உணவு, பாதுகாப்புத் துறையின் உதவியுடன் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் " கலப்பட தேயிலை தூள் பயன்படுத்தி இருப்பது குறித்து தேயிலை வாரியத்திற்கு தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்" என அறிவித்துள்ளது.