தமிழ்நாட்டில் முதுமலை உட்பட நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் சிறந்து விளங்கும் முதுமலை புலிகள் காப்பகதில் சமீபகாலமாக புற்களை வளரவிடாமல் அதன் மீது போர்த்தி படர்ந்து பார்த்தீனியம் செடிகள் பெருமளவில் வளர்ந்து வருகின்றன.
இந்தப் பார்த்தீனியம் செடிகள் வளரும் இடத்தில் புற்கள் வளர முடியாததால் யானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க வனத்துறையினர் முதற்கட்டமாக தெப்பக்காடு வனப்பகுதியில் உள்ள கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலை மற்றும் வனத்துறை வாகனங்கள் செல்லும் சாலை ஓரங்களில் உள்ள பார்த்தீனியம் செடிகளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் செடிகளை வெட்டி அகற்ற வனத்துறையினர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.