உதகை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் போஜராஜனை ஆதரித்து நடிகை நமீதா இன்று(ஏப்ரல்.03) காப்பிஹவுஸ் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், 'உதகை பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.
வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கினால், பிரியாணி செய்து சாப்பிடலாம்' என்றார்.
உதகை பாஜக வேட்பாளர், போஜராஜன் வெற்றி பெற்றால் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்பதற்குப் பதிலாக, போஜராஜன் வெற்றி பெற்றால் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார் என உளறினார். இதனால் கூட்டத்திலிருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நமீதா, 'சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியாகும் கருத்துக்கணிப்பின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது தெரியாது. இந்தத் தேர்தலில் அதிமுக, பாஜக வெற்றி பெறும் என நம்புகிறேன். தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்' என்று கூறினார்.
இதையும் படிங்க: 'மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டுப் போடுங்க' - நமீதாவின் பரப்புரையில் குஷியான தொண்டர்கள்!