ETV Bharat / state

குப்பை கிடங்கை காலி செய்யவில்லை - நீதிமன்றத்தை நாட மக்கள் முடிவு

நீலகிரி: தீட்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கை காலி செய்து இடத்தை வனத்துறையிடம் ஒப்படைக்குமாறு பசுமை தீர்ப்பாயம் உதகை நகராட்சிக்கு உத்தரவிட்டும் தொடர்ந்து நகராட்சி அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தீட்டுக்கல் குப்பைகிடங்கு
author img

By

Published : Jun 19, 2019, 12:38 PM IST

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு 15 டன் அளவிலான குப்பை கழிவுகள் உதகை நகராட்சி மூலம் சேகரிக்கபட்டு தீட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சேமிக்கப்பட்டுவருகிறது. 1972ஆம் ஆண்டு முதல் உதகை நகராட்சி வனத்துறைக்குச் சொந்தமான இந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து குப்பைகள் கொட்டி வரும் நிலையில் குப்பை கிடங்கிலிருந்து வரும் துர்நாற்றம், கழிவு நீர் போன்றவைகளால் தீட்டுக்கல் பகுதி மக்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுகிறது.

இதனையடுத்து தீட்டுக்கல் பகுதி மக்கள் குப்பை கிடங்கை மூட கோரியும் 2012ஆம் ஆண்டுடன் முடியும் குத்தகையை புதுப்பிக்க அனுமதியளிக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி 2011ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் தீட்டுக்கல் பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சில கட்டுபாடுகளுடன் குப்பை கிடங்கை பயன்படுத்துமாறு உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்தி வந்தது.

தீட்டுக்கல் குப்பைகிடங்கு

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு மீண்டும் தீட்டுக்கல் பகுதி மக்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தீட்டுக்கல் பகுதியில் இயங்கும் குப்பை கிடங்கை காலி செய்து, அந்த இடத்தை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைக்குமாறு பசுமை தீர்ப்பாயம் 2018ல் உத்தரவிட்டிருந்தது.

தீர்ப்பாயம் உத்தரவிட்டு பல மாதங்களை கடந்தும், குப்பை கிடங்கை காலிசெய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உடனடியாக குப்பை கிடங்கை காலி செய்யவில்லை என்றால், மீண்டும் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Intro:OotyBody:
உதகை 19-06-19
உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கை காலி செய்து அந்த இடத்தை வனத்துறையிடம் ஒப்படைக்குமாறு பசுமை தீர்ப்பாயம் உதகை நகராட்சிக்கு உத்தரவிட்டும் தொடர்ந்து நகராட்சி அலட்சி;யம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குப்பை கிடங்கை காலி செய்யாவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதாக பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
உதகை நகராட்சியில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு 15 டன் அளவிலான குப்பை கழிவுகள் உதகை நகராட்சி மூலம் சேகரிக்கபட்டு தீட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டபட்டு வருகிறது. 1972-ம் ஆண்டு உதகை நகராட்சி வனத்துறை இடத்தை குத்தகைக்கு எடுத்து குப்பைகள் கொட்டி வந்த நிலையில் குப்பை கிடங்கிலிருந்து வரும் துர்நாற்றம் மற்றும் கழிவு நீர் போன்றவைகளால் தீட்டுக்கல் பகுதி மக்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து தீட்டுக்கல் பகுதி மக்கள் குப்பை கிடங்கை மூட கோரியும் 2012 ஆண்டுடன் முடியும் குத்தகையை புதிபிக்க கூடாது எனவும் கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் தீட்டுக்கல் பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சில கட்டுபாடுகளுடன் குப்பை கிடங்கை பயன்படுத்துமாறு உத்தரவிட்டனர்.
ஆனால் உதகை நகராட்சி நிர்வாகம் நீதிமன்ற உத்தரவவை அமல்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு தீட்டுக்கல் பகுதி மக்கள் பசுமை தீர்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு இறுதியில் தீட்டுக்கல் குப்பை கிடங்கை காலி செய்து அந்த இடத்தை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைக்குமாறு உதகை நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தீட்டுக்;கல் பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவர்களது நிலத்தை சுற்றி வேலி அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
பசுமை தீர்பாயத்தின் இந்த தீர்ப்பு வந்த பிறகும் கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து உதகை மற்றும் கூடலூர் பகுதியில் சேகரிக்கப்டும் குப்பைகளையும், இறந்த கால்நடைகளையும் இங்கு புதைக்காமல் அப்படியே வீசி செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குப்பை சேகரித்து செல்லும் வாகனம் குப்பைகளை வழியிலேயே கொட்டி செல்வதாகவும், இது குறித்து கேட்டால் வாகன ஓட்டிகள் தங்களிடம் சண்டைக்கு வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றர். இந்த குப்;பை கிடங்கில் அடிகடி தீ வைப்பதால் அதிக புகை ஏற்பட்டு முச்சு தினறல், துர்நாற்றம், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் வருவதாகவும் குற்றம் சாட்டும் இவர்கள் கண்துடைப்புகாக பல மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ குழு வருவதாகவும் எந்த வித மருத்துவ சிகிச்சையும் ஏற்படுத்தி தருவதில்லை எனவும் இந்த குப்பை கிடங்கில் இருந்து காட்டு பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குள் குடியிருப்பு பகுதிக்கு வருவதாகும் விவசாய நிலங்களை நாசம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றர். உடனடியாக இந்த கிடங்கை மாற்றாவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தை நாடபோவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பேட்டி: நாகலிங்கம் - தீட்டுக்கல்
ஜெயா – தீட்டுக்கல்
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.