நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1400 பேர் கரோனாவால் பாதிக்கபட்டுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1070 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஆக்.25) காலை நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “நீலகிரியில் கரோனா வேகமாக பரவி வருவதால், சுற்றுலா பயணிகள் பயணத்தை தவிர்க்கவும். தடையை மீறி வருபவர்கள் மாவட்ட எல்லையில் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
மேலும், தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளை தங்க வைத்தால் சம்பந்தபட்ட தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், தேவையின்றி வெளியில் வரக் கூடாது. குறிப்பாக கரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் - அமைச்சர் ஜெயக்குமார்