நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மசகல் பகுதியில் தனியார் காய்கறிகள் பதப்படுத்தும் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றி எரிந்த தீ மலைகள் சூழ்ந்த பகுதியில் புகைமூட்டம் போல் காட்சியளித்தன. வானை நோக்கி கருநிற புகை வெளிவருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இதில், ரூபாய் ஒரு கோடிக்கு மேலான மதிப்புடைய இயந்திரங்கள் தீயில் கருகி நாசமாயின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கால்நடை கொட்டகை அமைக்க ரூ. 431 கோடி நிதி ஒதுக்கீடு!