நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவுப்படி கரோனா விழிப்புணர்வு நாடகம் மாவட்டத்திலுள்ள ஊராட்சி, பேருராட்சி, நகராட்சி பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், குன்னூரிலுள்ள உயிர் தோழர் அமைப்பினர், கரோனா போன்று உடைகள் அணிந்து விழிப்புணர்வு நாடகத்தை தத்ரூபமாக நடத்தி வருகின்றனர்.
குன்னூர் நகரில் விபி தெரு, பெட்போர்டு பகுதிகளில் நடத்தப்பட்ட நாடகத்தில், கட்டாய முகக் கவசம் அணிதல், கை கழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்பட கரோனா தடுப்பு குறித்து மாநில அரசின் பல்வேறு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், அக்டோபர் 1ஆம் தேதி வரை நீலகிரி, கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விழிப்புணர்வு தெரு நாடகம் நடத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கில் பள்ளி மாணவர் உருவாக்கிய அட்டகாசமான செயலி!