நீலகிரி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூர் பகுதியில் உள்ள மருந்தகங்களில் திடீரென முகக் கவசங்கள் விற்பனையை நிறுத்தியுள்ளனர். அரசு கரோனாத் தடுப்பு உபகரணங்களை குறைந்த விலைக்கு நிர்ணயித்துள்ளது.
ஏற்கனவே, மருந்தகங்களில் முகக் கவசங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசு அறிவித்த குறைந்த விலைக்கு விற்பனை செய்யாமல், மருந்தகங்களில் முகக் கவசங்கள் விற்பனையை நிறுத்துயுள்ளனர்.
இதனால், முகக் கவசங்கள் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது, குன்னூர் பகுதியில் முகக் கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து, நீலகிரி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வருவாய் துறையினர் துணையுடன் ஏரிகளில் மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!