நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேவுள்ள ஒட்டுப்பட்டரை ஸ்ரீ சாந்தி விஜயா ஆரம்பப்பள்ளியில் மறைந்த நடிகர் விவேக் இளம்பருவத்தில் பயின்றுள்ளார்.
இதன் நினைவாக கடந்தாண்டு அப்பள்ளிக்குச் சென்ற நடிகர் விவேக் அங்குள்ள ஆசிரியர்களுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டும், மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், இவரது மறைவு தங்களுக்குப் பேரிழப்பாக உள்ளதாகக் கூறி குன்னூர் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், எக்ஸ்நோர அமைப்பைச் சேர்ந்த கண்ணன், அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சிவன், சரவணன் மஸ்தான் உள்ளிட்டோர் குன்னூர் பேருந்து நிலையம் அருகே அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: விவேக் மரணத்திற்கு தடுப்பூசி முழு காரணம் அல்ல- சீமான்