ETV Bharat / state

குன்னூரில் தரமற்ற சாலை அமைப்பு பணி - போராட்டத்தில் இறங்கிய மக்கள்! - நீலகிரி போராட்டம்

Coonoor road problem: குன்னூர் பகுதியில் தரமற்ற சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் பாஜக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குன்னூரில் தரமற்ற சாலை அமைப்பு பணி: போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 12:32 PM IST

குன்னூரில் தரமற்ற சாலை அமைப்பு பணி: போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

நீலகிரி: குன்னூரில் 700 மீட்டர் சாலை அமைக்கும் பணியில் தரமற்ற வகையில் சாலை அமைப்புப்பணியில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பொது மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் உடனடியாக புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலைகள் அகற்றப்பட்டு புதிய தார் சாலை அமைக்க உறுதியளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட மேல் குன்னூர் பகுதியில் இருந்து மேல் குன்னூர் காவல் நிலையம் வரையிலான 700 மீட்டர் தார் சாலை புனரமைப்பு பணி, நகராட்சி மூலம் குன்னூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் கே கே எஸ் ஈஸ்வரன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலை அமைக்கும் பணி, கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தார்ச்சாலை பணிகளுக்காக ஜல்லி கலவை, தாரின் அளவு ஆகியவை குறைக்கப்பட்டதால் கையில் அள்ளினால் சாலை பெயர்ந்து வரும் அளவிற்கு தரம் இல்லாமல் அவசர அவசரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள், சாலையின் பணிகள் தரக்குறைவாக உள்ளது என்றும் உடனே பணிகளை நிறுத்தும் படி கூறியுள்ளனர். பின்னர் அதிகாரிகள் மற்றும் திமுக நகரச் செயலாளர் ராமசாமி, நகர மன்ற தலைவர் சீலா கேத்தரின் ஆகியோர் முறையாக ஆய்வு செய்யாமல் கணிசமான தொகையை கமிஷனாக பெற்றுக் கொண்டு பணிகள் நடப்பதாக கூறி அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதையும் படிங்க: 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பில் கலெக்டரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!!

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திமுக நகரச் செயலாளர் ராமசாமி மற்றும் நகர மன்ற தலைவர் சீலா கேத்தரின் ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தையில் இறங்கினர். மேலும் மறு சீரமைப்பு செய்து தருவதாக கூறினார். ஆனால் பொதுமக்கள் உடனடியாக சாலையை ஜேசிபி இயந்திரம் மூலம் அள்ளி எடுத்து மீண்டும் தரமான சாலை வேண்டுமென்று பிடிவாதமாக நின்றனர்.

உடனே சம்பவ இடந்துக்கு வந்த மேல் குன்னூர் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வேறு வழியின்றி ஜேசிபி மூலம் புதிதாக புனரமைக்கப்பட்ட சாலையில் இருந்த ஜல்லிகளை அகற்ற தொடங்கினர்.

ஒப்பந்ததாரர் தரமற்ற சாலையை அமைப்பது வேதனை அளிப்பதாகவும் பழைய சாலையே சரியாக தான் இருந்தது என்றும் அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதுபோன்று குன்னூர் நகராட்சி பகுதியில் பல வளர்ச்சிப் பணிகள் தரம் இல்லாமல் நடப்பதாகவும், இதற்கு காரணம் எந்த வேலை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தாலும் நகர மன்ற தலைவர் மற்றும் நகரச் செயலாளர் வார்டு உறுப்பினர்கள் என அனைவரும் தங்களுக்கு வேண்டிய கமிஷனை பெற்றுக் கொள்வதால் இதுபோன்று தரமற்ற பணிகள் குன்னூர் நகராட்சியில் நடப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பின்னர் அதே ஒப்பந்ததாரர், ஜேசிபி மூலம் புதிய தார் சாலையை அகற்றி மீண்டும் புதிய தார் சாலை அமைத்துக் கொடுப்பதாக நகரமன்ற தலைவர் மற்றும் நகர செயலாளர் முன்பாக வாக்குறுதி அளித்தார். வாக்குறுதியின் பேரில் பாஜகவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: Wayanad jeep Accident: கேரளாவில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 9 பெண்கள் பலி; தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.