ETV Bharat / state

குடியரசு தலைவர் வருகை : நீலகிரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு - president visit security

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நீலகிரிக்கு வருவதையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் வருகை
நீலகிரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு
author img

By

Published : Aug 3, 2021, 7:44 AM IST

Updated : Aug 3, 2021, 9:28 AM IST

நீலகிரி: தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட்.3) காலை சென்னையிலிருந்து கோயம்புத்தூர் சூலூர் விமான படை தளத்திற்கு வருகிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 12.25 மணிக்கு உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து தரை இறங்குகிறார். 12.35 மணிக்கு உதகையில் உள்ள ராஜ்பவன் சென்று தங்குகிறார்.

ராஜ்பவன்

உதகையில் உள்ள ராஜ் பவன், ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அப்போது ஆங்கிலேய அலுவலர்கள் சென்னையின் வெப்பம் தாங்காமல் நீலகிரியின் குளிரில் இளைப்பாற வருவார்களாம். பின்னாளில் தமிழ்நாட்டின் ஆளுநர்களுக்கு கோடைகால இல்லமாக இது மாற்றப்பட்டுள்ளது.

இன்று நீலகிரி வரும் குடியரசுத் தலைவரும் ராஜ் பவனில்தான் தங்குகிறார். அங்கிருந்து 4ஆம் தேதி காலை 9.50 மணிக்கு, புறப்பட்டு 10.20 மணிக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்கிறார்.

ராணுவ பயிற்சி கல்லூரியை பார்வையிடும் அவர், அங்கு நடைபெறும் கொடி மாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ராணுவ பயிற்சி முடித்த 527 இந்திய ராணுவ அலுவலர்கள், பல்வேறு வெளிநாடுகளை சார்ந்த 50 ராணுவ அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பட்டங்களை வழங்குகிறார்.

அப்போது சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி தனி பல்கலைக்கழகமாக அறிவிக்கபட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுற்றுலாத்தலங்களுக்கு விசிட்

அதனை முடித்துகொண்டு 12 மணிக்கு இராணுவ பயிற்சி கல்லூரியிலிருந்து உதகைக்கு புறபடும் குடியரசு தலைவர் 12.30 மணிக்கு மீண்டும் ராஜ்பவனுக்கு திரும்பி வருகிறார்.

அன்று இரவு அங்கு தங்கும் அவர் 5ஆம் தேதி காலை முதல் மாலைவரை தாவரவியல் பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிடுவதாக கூறப்படுகிறது.

நீலகிரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு

தொடர்ந்து 6ஆம் தேதி காலை 10.30 மணிக்கு உதகை ராஜ்பவனில் இருந்து புறபட்டு தீட்டுக்கல் சென்று 10.50 மணிக்கு புறபட்டு சூலூர் விமான படைதளத்திற்கு செல்கிறார். அவருடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகிறார். குடியரசு தலைவர் உதகைக்கு வருவதையொட்டி 3 அடுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவருக்கு கருப்புக் கொடி - 7 பேர் கைது!

Last Updated : Aug 3, 2021, 9:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.