நீலகிரி: குன்னூர் காட்டேரி பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்கான மலர் நாற்று நடவுப்பணிகள், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பொறுப்பில் சிபிலா மேரி இன்று (ஆக.18) தொடங்கினார். இதில் பேன்சி சால்வியா, ஜெனிவா மேரி, கோல்ட் போன்ற 20க்கும் மேற்பட்ட மலர் செடி ரகங்களும் ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளைத் தாயகமாகக் கொண்ட டேலியா, சால்வ்யா, இனியா போன்ற மலர் நாற்றுகளும் நடவு செய்யப்பட்டன.
மொத்தமாக, ஒரு லட்சத்து 90 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இவைகள் அக்டோபர் மாதத்தில் பூத்துக் குலுங்கும். இவைகளைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பூங்காவுக்கு வரக்கூடும் எனத் தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோடு அருகே நிறம் மாறிய நிலத்தடி நீர்... ஆய்வுசெய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம்