நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். அங்கு, இந்தாண்டின் 63ஆவது பழ கண்காட்சியை மே மாதம் நடத்தவுள்ளனர். இதற்காக, சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனையொட்டி இன்று, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் குருமணி, முதல் நாற்றை நடவு செய்து தொடங்கிவைத்தார்.
இதில், சால்வியா, பால்சம், டேலியா, மேரிகோல்டு உள்ளிட்ட 29 வகையான மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. இந்தாண்டு அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து, ஸ்டாக்ஸ், சைக்ளமேன், கிளியோம், செலோஷியா உள்ளிட்ட 152 ரகங்கள் வரவழைக்கப்பட்டு, நாற்றுக்களாக உற்பத்தி செய்து நடவு செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கடும் பனிப்பொழிவு நிலவும் நிலையில் இந்த ஆண்டு கொட்டும் மழையில் நடவு பணி நடைபெற்றது. குறிப்பிடத்தக்கது.