ETV Bharat / state

பழங்குடியின மக்கள் மாற்று இடத்தில் முறைகேடு - 9 பேர் மீது வழக்குப் பதிவு! - case register against nine person

நீலகிரி: பழங்குடியின மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் திட்டத்தில் இரண்டு கோடி  முறைகேடு செய்த வனத்துறை அதிகாரி உட்பட 9 பேர் மீது குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நீலகிரி
author img

By

Published : Sep 3, 2019, 9:11 PM IST

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் கோர்ஜோன் எனப்படும் பகுதியில் வாழ்ந்துவரும் மக்களை வெளியில் குடியமர்த்தும் திட்டத்தை புலிகள் காப்பக நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் படி இங்கு மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் ரூபாய் நிதியும், மாற்று இடத்தையும் வழங்க வேண்டும். அதன்படி, நெல்லிகரை, பென்னை, புளியாளம், மண்டகரை என 7 கிராமங்களைச் சேர்ந்த மக்களை படிப்படியாக வெளியேற்றி மாற்று இடத்தில் குடியமர்த்தி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, புளியாளம் கிராமத்தில் வசிக்கும் 21 குடும்பத்தினருக்கு, மச்சகொல்லி என்ற இடத்தில் மாற்று இடம் வழங்கபட்டது. ஆனால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டிய 10 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை, மேலும் வனத்துறையினர் வழங்கிய மாற்று இடத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக, மின்வாரியத்திற்கு சென்றபோது தங்களுக்கு வழங்கப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பழங்குடியின மக்கள் இதுகுறித்து உடனடியாக நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.

பழங்குடியின மக்கள் மாற்று இடத்தில் முறைகேடு

புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட முதுமலை புலிகள் காப்பகம் நெலாக்கோட்டை வனச்சரகர் சுரேஷ்குமார், வழக்கறிஞர்கள் சுகுமாரன், ஜெயா ஜோசப், இடைத்தரகர்கள் பேபி, ராதாகிருஷ்ணன், சீனிவாசன், ஜோசப், பாபு, தாமஸ் ஆகிய ஒன்பது பேர் மீது ஒன்பது பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Intro:OotyBody:
உதகை 03-09-19
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் திட்டத்தில் 2 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த வனத்துறை அதிகாரி உள்பட 9 பேர் மீது நீலகிரி மாவட்ட குற்ற பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்….
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் கோர்ஜோன் எனபடும் மைய பகுதியில் வாழ்ந்து வரும் பொதுமக்களை புலிகள் காப்பகத்தின் வெளியில் குடி அமர்த்தும் திட்டத்தை புலிகள் காப்பக நிர்வாகம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் படி புலிகள் காப்பகத்தில் 3 தலைமுறைகளாக இருப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கி மாற்று இடத்தையும் வழங்க வேண்டும். அதன் படி நெல்லிகரை, பென்னை, புளியாளம், மண்டகரை என 7 கிராமங்களை சார்ந்த மக்கள் படிபடியாக வெளியேற்றி மாற்று இடத்தில் குடியமர்த்தபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புளியாளம் கிராமத்திலிருந்து வெளியேற்றபட்ட 21 குடும்பத்தினருக்கு மச்சகொல்லி என்ற இடத்தில் மாற்று இடம் வழங்கபட்டது. ஆனால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டிய 10 லட்சம் ரூபாய் வழங்கவில்லை. வனத்துறையினர் வழங்கிய மாற்று இடத்தில் வீடுகளை கட்டிய அந்த மக்கள் மின் இணைப்பு பெறுவதற்காக மின்வாரியத்திற்கு சென்ற போது தங்களுக்கு வழங்கபட்ட இடம் அரசுக்கு சொந்தமான பொரம் போக்குநிலம் என்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த பழங்குடியின மக்கள் இது குறித்து உடனடியாக நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட குற்ற பிரிவு போலிசார் விசாரணை நடத்தியாதில் முறைகேடு நடைபெற்றது தெரிய வந்தது. இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட முதுமலை புலிகள் காப்பகம் நெலாக்கோட்டை வனச்சரகர் சுரேஷ்குமார், வழக்கறிஞர்கள் சுகுமாரன், ஜெயா ஜோசப், இடைதரகர்கள் பேபி, ராதாகிருஷ்ணன், சீனிவாசன் மற்றும் ஜோசப், பாபு, தாமஸ் ஆகிய 9 பேர் மீது 9 பிரிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மாவட்ட குற்ற பிரிவு போலிசார் தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர். முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் பழங்குடியின மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் திட்டத்தில் சுமார் 2 கோடி முறைகேடு செய்துள்ளதுடன் அரசு நிலத்தையும் வழங்கி பழங்குடியின மக்களை ஏமாற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்;படுத்தி உள்ளது.
Conclusion:Ooty

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.