ETV Bharat / state

நீலகிரியில் காட்டு யானை தாக்கி மீண்டும் ஒரு உயிரிழப்பு! வனத்துறையினர் எச்சரிக்கை! - வனத்துறையினர் எச்சரிக்கை

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் மீண்டும் ஒருவர் உயிரிழப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 3:59 PM IST

நீலகிரி: கூடலூர் அருகே உள்ள நாடு காணி பொன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 50). இவர் நேற்று (டிச. 2) தேவாலா வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் இன்று (டிச.3) காலை வனச்சரக அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் வனப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் ராமமூர்த்தி சடலமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ராமமூர்த்தியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சடலம் மீட்கப்பட்ட இடத்தில், யானைகளின் கால் தடங்கள் கண்டறியப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ராமமூர்த்தி காட்டு யானை தாக்கி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் சோதனை மேற்கொண்டு வந்த வனத்துறையினர், அப்பகுதியில் நான்கு காட்டு யானைகள் உலாவிக் கொண்டிருந்ததை உறுதிபடுத்தினர். இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தியின் சடலத்தை மீட்ட வனத்துறையினர் உடற்கூராய்விற்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவே அச்சம் கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில், தற்போது அதேபகுதியில் மீண்டும் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பதியில் பதற்றம் கிளப்பி உள்ளது.

இதனையடுத்து, பொதுமக்கள் யாரும் அநாவசியமாக வெளியே வர வேண்டாம் என்றும், யானைகளின் நடமாட்டம் மக்கள் வசிக்கும் பகுதிக்களில் தென்பட்டால், பொதுமக்கள் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபடமால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் - என்.ஐ.ஏ வசம் போன ஆவணங்கள்! அடுத்து என்ன நடவடிக்கை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.