நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பீச், பிளம், எலுமிச்சை, லிச்சி உள்பட ஏராளமான பழ வகை மரங்கள் உள்ளன. அங்கு அரிய வகையான 'பெர்சிமன்' பழ மரங்களும் உள்ளன.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட 'பெர்சிமன்' பழத்தின் சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இப்பழம் ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் உள்ளது. இப்பழத்தில் வைட்டமின் 'ஏ', 'பி' சத்துகள் நிறைந்துள்ளதால் மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு விகிக்கிறது. இவை மற்ற பழங்களை போல் மரத்திலேயே பழுப்பதில்லை. அதற்கு பதிலாக, இவை காயாக இருக்கும் போதே பறிக்கப்பட்டு 'எத்தனால்' என்ற திரவத்தில் ஊற வைக்கப்படுகிறது. பின்னர், இரண்டு நாள்களில் பழுத்துவிடும் பழத்தினை தோட்டக்கலை பண்ணையில் விற்பனை செய்கின்றனர்.
இதையும் படிங்க: 'வெட்டுக்கிளிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை'