ETV Bharat / state

"இது பைக்காராவா... நயாகராவா" - அருவியைக் கண்டு மகிழும் சுற்றுலாப் பயணிகள்! - மழை

நீலகிரி: உதகை அருகே உள்ள பைக்காரா நீர் வீழ்ச்சியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நீர் பெருக்கெடுத்து கொட்டுவதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

நீர் வீழ்ச்சியைக் காண வந்த சுற்றுலாப் பயணிகள்
author img

By

Published : Sep 6, 2019, 7:44 PM IST

நீலகிரியில், போதிய மழை இல்லாததால் கடந்த 5 மாதங்களாக பைக்காரா அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே கடந்த மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 100 அடி உயரம் கொண்ட பைக்காரா அணை தற்போது மளமளவென நிரம்பியது. முழுக்கொள்ளவை எட்டியதைத் தொடர்ந்து பைக்காரா அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

பைக்காரா நீர் வீழ்ச்சியைக் காண குவியும் சுற்றுலாப் பயணிகள்

மேலும் அருகிலுள்ள பைக்காரா நீர்வீழ்ச்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். வெள்ளி உருகி கொட்டுவது போல நீர் வீழ்ச்சியில், தண்ணீர் கொட்டுவதைக் கண்டு அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், மக்கள் குடும்பத்துடன் நீர் வீழ்ச்சிக்கு வந்து புகைப்படம் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் ரசித்து செல்கின்றனர்.

இதனால் பைக்காரா நீர் வீழ்ச்சியில் இனிவரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. அதேபோல் பைக்காரா நீர் வீழ்ச்சியில் சீசன் களை கட்டத் தொடங்கியதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Intro:OotyBody:
உதகை 06-09-19
உதகை அருகே உள்ள பைக்காரா நீர் வீழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுவதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்…..
உதகையிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் பைக்காரா அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து வெளியேற்றபடும் தண்ணீர் பைக்காரா நீர் வீழ்ச்சி வழியாக மாயார் ஆற்றுக்கு செல்கிறது. இந்த நீர் வீழ்;ச்சியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் போதிய மழை இல்லாததால் கடந்த 5 மாதங்களாக பைக்காரா அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றபடாமல் இருந்து வந்தது. இதனிடையே கடந்த மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 100 அடி உயரம் கொண்ட பைக்காரா அணை தற்போது நிரம்பியதை அடுத்து திறக்கபட்டுள்ளது. அணை திறக்கபட்டுள்ளதால் பைக்காரா அற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதுடன் பைக்காரா நீர் வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.
இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுவதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் பைக்காராவில் குவிந்து வருகின்றனர். அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியில் வெள்ளி உருகி கொட்டுவது போல தண்ணீர் கொட்டுவதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பு மக்களும் நீர் வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்து புகைபடம் எடுத்தும், செல்பி எடுத்தும் கண்டு ரசித்து செல்கின்றனர். இதனால் பைக்காரா நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணபடுகிறது. இதனால் பைக்காரா நீர் வீழ்ச்சியில் சீசன் கலை கட்ட தொடங்கி உள்ளது.
பேட்டி: அசோக் – சுற்றுலா பயணி

Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.