நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், சமவெளிப் பகுதிகளிலிருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் வழியாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர்.
அபராதம்
தற்போது, கரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். மேலும், சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், தலைக்கவசம் அணியாமலும் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்துக் காவல் துறை அபராதம் விதித்துவருகின்றது.
இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், குன்னூர் போக்குவரத்துக் காவலர்கள், காட்டேரி பகுதியில் சோதனை நடத்திவருகின்றனர்.
100 ரூபாய்
இதில் இருசக்கர வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் முகக்கவசம் அணியாமல் வருகைதருகின்றனர். இவர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.
மேலும், தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாமல் வருபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் முகக்கவசம் அணியாமல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுரை வழங்கிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'கரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைப்பு!'