நீலகிரி: குன்னூர் பகுதிகளில் பேரி, பிளம்ஸ், அத்தி உள்பட பல்வேறு அரிய வகை பழங்கள் விளைகின்றன. இவற்றில் சில பழங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடவுசெய்யப்பட்டவை. குன்னூரில் தோட்டக்கலை பழப் பண்ணையில் தற்போது மார்மலேட் ஆரஞ்ச் சீசன் தொடங்கியுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்ட இந்தப் பழங்களில் வைட்டமின் சி-யும் செறிந்து காணப்படுகிறது. இந்தத் பழம் மட்டுமின்றி தோலிலும் ஜாம் தயாரிக்கப்படுகிறது. இதன் பழக்கூழை வெளிநாடுகளில் உள்ளோர் அதிகம் விரும்பி உண்ணுவர்.
ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டில் திருமண விருந்துகளில் இந்த மார்மலேட் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்த ஆரஞ்சுகள் பெரிய கடைகளில் மட்டும் விற்கப்படுகின்றன. இவற்றின் நாற்றுகள் அதிகளவில் தோட்டக்கலைத் துறையினர் உற்பத்திசெய்ய வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பூத்து குலுங்கும் ரெட் லீப் மலர்கள்