ETV Bharat / state

இளைஞர்கள் உயிரிப்பு: கல்லட்டி அருவிக்குச் செல்ல தடை

நீலகிரி: கல்லட்டி அருவியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ooty-kalhatti-falls-restricted-for-tourists-after-2-youngsters-died-by-drowning
2 இளைஞர்கள் உயிரிப்பு.. கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு தடை!
author img

By

Published : Jan 28, 2020, 5:20 PM IST

நீலகிரி மாவட்டம் அருகே கல்லட்டி அருவியைக் காண கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உதகையிலிருந்து இளைஞர்கள் ஏழு பேர் சென்றுள்ளனர்.

அதில் கணேசன், சாமுவேல் என்ற இரண்டு பேர் அருவியில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களது உடல்கள் தண்ணீருக்கு அடியில் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டது. இதனால் அவர்களின் உடல்களைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டுவந்தனர். ஆனால் உடல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து அரக்கோணத்திலிருந்து மாநில பேரிடர் மீட்புப் படையினரும், தமிழ்நாடு தீயணைப்புத் துறையைச் சார்ந்த ஸ்கூப்பா டைவிங் வீரர்களும் வரவழைக்கபட்டனர். அவர்கள் இன்று காலை உடல்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது தீயணைப்புத் துறை வீரர்கள் உயிரிழந்த கணேசன், சாமுவேல் ஆகியோரது உடல்களைக் கண்டுபிடித்து மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் உடனடியாக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதகை கோட்டாட்சியர் சுரேஷ், 'இனிவரும் காலங்களில் கல்லட்டி அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்குத் தடைவிதிக்கப்படும் சுற்றுலாத் தலம் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு அருவிக்குச் செல்லும் சாலையில் சோதனைச்சாவடி அமைக்கப்படும்' எனக் கூறினார்.

2 இளைஞர்கள் உயிரிழப்பு: கல்லட்டி அருவிக்குச் செல்ல தடை

இதையும் படியுங்க: கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க 2ஆம் நாளாகத் தடை!

Intro:OotyBody:
உதகை 28-01-20
உதகை அருகே உள்ள கல்லட்டி நீர் வீழ்ச்சியில் மாயமான இரண்டு இளைஞர்களின் உடல்கள் இரண்டு நாட்களுக்கு பின் மீட்கபட்டதையடுத்து அந்த நீர் வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் செல்ல தடை செய்யபட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உதகை அருகே உள்ள கல்லட்டி நீர் வீழ்ச்சியை காண கடந்த ஞாயிற்று கிழமை அன்று உதகையிலிருந்து 7 இளைஞர்கள் சென்றனர். அதில் கணேசன் மற்றும் சாமுவேல் என்ற இரண்டு இளைஞர்கள் நீர் வீழ்ச்சியில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களது உடல்கள் தண்ணீருக்கு அடியில் ஆழமாக இடத்திற்கு சென்றது. அவர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் இருவரின் உடல்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அரக்கோணத்தில் இருந்து மாநில பேரிடர் மீட்பு படையினரும், தமிழக தீயணைப்பு துறையை சார்ந்த ஸ்கூப்பா டைவிங் வீரர்களும் வரவழைக்கபட்டனர்.
அவர்கள் இன்று காலை உடல்களை தேடும் பணி ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு துறை வீரர்கள் கணேசன் மற்றும் சாமுவேல் ஆகியோரது உடல்களை கண்டு பிடித்து மீட்டனர். மீட்கபட்ட இருவரின் உடல்களும் உடனடியாக உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைக்கபட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதகை கோட்டாச்சியர் சுரேஷ் கல்லட்டி நீர் வீழ்ச்சி இனி வரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கபடும் என்றும், சுற்றுலா தலம் பட்டியிலில் இருந்து நீக்கபட்டு நீர் வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் செக்போஸ்ட் அமைக்கபடும் எனவும் கூறினார்.
பேட்டி: சுரேஷ் - உதகை கோட்டாச்சியர்
இமானுவேல் - மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.