ETV Bharat / state

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கியவருக்கு அஞ்சலி

நீலகிரி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கியவரின் நினைவு தினத்தையொட்டி அவரது கல்லறைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவு தினம்
author img

By

Published : Jun 9, 2019, 8:18 AM IST

நீலகிரி மாவட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா. 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவை ஆண்டிற்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

இன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கியவரின் நினைவு தினம்

புகழ்பெற்ற இந்தப் பூங்காவை உருவாக்கும் பணியை 1843ஆம் ஆண்டு மெக்ஐவர் என்பவர் தொடங்கிவைத்துள்ளார். பூங்கா உருவாக்கும் பணி 1867ஆம் ஆண்டு நிறைவடைந்து பூங்கா திறக்கப்பட்டது. அப்போது பல்வேறு நாடுகளைச் சார்ந்த மரங்களும், மலர் செடிகளும் கொண்டு வரப்பட்டு நடப்பட்டன. இந்தப் புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் 1876ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அவருடைய நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று அவரது 143ஆவது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதனையொட்டி ஊட்டி ஸ்டீபன் ஆலயத்தில் உள்ள அவரது கல்லறையில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு, அரசு தாவரவியல் பூங்கா அலுவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

உதகை                                08-06-19
பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவரின் 143 –வது நினைவு தினத்தையொட்டி உதகையில் உள்ள அவரது கல்லறைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது…..
  நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றில் முக்கிய சுற்றுலா தலமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா விளங்குகிறது. 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை ஆண்டிற்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர். புகழ்பெற்ற இந்த பூங்காவை உருவாக்கும்; பணியை 1843 – ம் ஆண்டு மெக்ஐவர் என்பவர் தொடங்கி வைத்துள்ளார். 1867-ம் ஆண்டு பூங்கா பணிகள் நிறைவடைந்து பூங்கா திறக்கப்பட்டது.  
   அப்போது பல்வேறு நாடுகளை சார்ந்த மரங்களும், மலர் செடிகளும் கொண்டு வரபட்டு நடப்பட்டது. இந்த நிலையில் தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் 1876 –ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய நினைவு தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 8 – ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று அவரது 143 –வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி உதகை ஸ்டீபன் ஆலயத்தில் உள்ள அவரது கல்லறையில் தாவரவியல் பூங்கா அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது சிறப்பு பிரார்த்தனையும் செய்யப்பட்டது.
பேட்டி: திரு. ராதாகிருஷ்ணன் – உதகை தாவரவியல் பூங்கா அதிகாரி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.