ETV Bharat / state

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சம் வழங்கிய தூய்மை பணியாளர்கள்

நீலகிரி: முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்யை தூய்மை பணியாளர்கள் வழங்கினர். இதேபோல் மாவட்ட ஆட்சியரும் தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

niligiris sanitary workers give fund to Cm relief funds

author img

By

Published : Apr 16, 2020, 6:56 PM IST

கரோனா பாதிப்பு நிதியாக தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தனது ஒரு மாத சம்பளமான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கினார்.

அதேபோல் தமிழ்நாட்டில் முதல்முறையாக உதகையில் பணியாற்றி வரும் தற்காலிக, நிரந்தர தூய்மை பணியாளர்கள் 500 பேர் சார்பாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நீலகிரி ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

நிதி வழங்கிய தூய்மை பணியாளர்கள்

கரோனா பாதிப்பு பணியில் இரவு பகலாக பணியாற்றிவரும் இந்தத் தூய்மை பணியாளர்கள், தங்களது பங்கிற்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியதற்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க... தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய ரயில்வே தொழிலாளர் சங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.