தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது.
குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார் பகுதிகளில் மழை அதிகளவு பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதுடன் அவ்வப்போது கடும் மேகமூட்டம் நிலவுகிறது.
தற்போது வரை பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் குன்னூர் - மேட்டுப்பாளையம் பகுதிகளில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். சாலைகளில் கடும் மேகமூட்டம் காணப்படுகிறது.
சாலைகளில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றன. கடுங்குளிரும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.