நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குன்னூர் அருகே உள்ள எல்லநள்ளி பகுதி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, குன்னூர் அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய நபர் ஒருவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்தத் தொழிற்சாலையில் பாதிக்கப்பட்டவருடன் பணிபுரிந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தத் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள சுமார் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு வசிக்கும் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காமராஜர் நகர் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தையும் மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.