ETV Bharat / state

காட்டெருமைகள் தாக்கியதில் பெண் உயிரிழப்பு - Nilgiri Wildlife

நீலகிரி: காட்டெருமைகள் தாக்கியதில் பெண் உயிரிழந்ததை அடுத்து வனவிலங்குகளை விரட்ட வனத்துறையினரிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனவிலங்குகளை விரட்ட விவசாய சங்கங்கள் கோரிக்கை

author img

By

Published : Mar 13, 2020, 10:50 PM IST

Updated : Mar 13, 2020, 11:43 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜக்கனாரை பகுதியைச் சோர்ந்தவர் பார்வதி (55). இவர் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மூன்று காட்டெருமைகள் திடீரென வந்து அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே மக்கள் வசிக்கும் பகுதிக்கு காட்டெருமை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்டவை வருவதாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆகவே வனத்துறையினர் வனவிலங்குகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்த நாக்குபெட்டா விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளனர்.

வனவிலங்குகளை விரட்ட விவசாய சங்கங்கள் கோரிக்கை

இதையும் படிங்க: மின்கம்பங்கள் வழியாக தரையில் பாய்ந்த மின்சாரம் - வனவிலங்குகள் உயிரிழப்பு

Last Updated : Mar 13, 2020, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.