நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காட்டெருமைகள் குடிநீர், உணவைத்தேடி அவ்வப்போது குடியிருப்பு, சாலைப் பகுதிகளில் வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குன்னூர் கரிமரஹட்டி பகுதியில், தைலம் இலைகளை சேகரித்து கொண்டிருந்த மூதாட்டி மாகாளியை காட்டெருமை பலமாக தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது அவரை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: அடேய் ஓடுடா ஓடு' - விளைநிலத்தில் புகுந்த காட்டெருமை அட்டகாசம்!