நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை ஆண் காட்டு யானை தனியாக சாலையோரத்தில் உணவு, தண்ணீருக்காக சுற்றித் திரிந்துள்ளது.
இதையடுத்து, இந்த காட்டுயானை காட்டேரி தோட்டக்கலை பண்ணையில் உள்ள பிள்ளையார் கோயில் வளாகத்தில் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் காட்டேரி தோட்டக்கலை பண்ணையாளர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை ஆண் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெட்டிக் கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது!