ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய தொழில்நுட்ப பயன்பாடு

டி.என்.பி.சி குரூப்-1 தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க இரண்டு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

New technology application to prevent irregularities in TNPSC exam

author img

By

Published : Dec 29, 2020, 4:03 PM IST

நீலகிரி: தமிழ்நாட்டில் ஜனவரி 3ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடைபெறவுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தேர்வு நடத்துவது குறித்தும், தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தற்கு இன்று (டிசம்பர் 29) வந்த அவர், உதகையில் தேர்வு நடைபெறும் மூன்று மையங்களை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் குரூப்-1 தேர்வு எழுத 2 லட்சத்து 56 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆன்லைன் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய ஆதார் எண் கட்டாயம். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள ஆதார் குளறுபடி காரணமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஒடிபி மற்றும் பிறந்த தேதி மூலமாக பதிவிறக்கம் செய்யும் முறை பின்பற்றப்படுகிறது.

தமிழ்நாட்டில் குரூப்-1 தேர்வு எழுத 856 மையங்கள் தயார் படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க ஓ.எம்.ஆர் சீட்டில் இரண்டு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதற்காக ஓ.எம்.ஆர். சீட்டில் தேர்வு எழுதுபவர் எத்தனை கேள்விகள் எழுதி உள்ளார் என்பதை அறை கண்காணிப்பாளர் சரிபார்த்து சான்று அளிக்க வேண்டும். அதன்படி ஓ.எம்.ஆர் சீட்டு இரண்டு பகுதிகளாக இருக்கும். அதில் ஒரு பகுதியில் தேர்வு எழுதுபவரின் விவரங்களும் மற்றொரு பகுதியில் அந்த விவரங்கள் அனைத்தும் பார்கோடாக பதியபட்டிருக்கும் என்றார். தேர்வு முடிந்தவுடன் பார்கோடு உள்ள பகுதி மட்டுமே ஸ்கேன் செய்யப்படுவதால், அந்த விடைத்தாள் யாருடையது என்ற எந்த விவரமும் யாருக்கும் தெரியாத அளவிற்கு புதிய நடைமுறை அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்

முன்பு நடைபெற்ற டி.என்.பி.சி தேர்வின் போது அழியும் மை கொண்டு தேர்வு எழுதபட்டதாகவும், விடைதாள்கள் எடுத்து செல்லும் வழியில் திருத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. அது போன்ற முறைகேடுகள் நடக்காமல் தடுக்க தேர்வு முடிந்தவுடன் ஓ.எம்.ஆர் சீட்கள் அனைத்தும் ஒரு பெட்டியில் வைத்து ஜி.பி.எஸ் லாக் போடப்படும். அந்த ஜி.பி.எஸ் பெட்டின் ரகசியை எண் கட்டுப்பாட்டாளருக்கு மட்டுமே தெரியும் என்பதால் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை செய்யபட்டு, முறையாக கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற பின்னரே தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதிக உடல் வெப்பநிலை, சளி, காய்ச்சல் உள்ளவர்கள் தனி அறையில் வைத்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.