நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த போஸ்பாரா பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில், சமையல் பணியாளராக இருப்பவர் குளோரிடா மேரி (41). இவர் வழக்கம் போல் நேற்று பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென அம்மையத்தினுள் நுழைந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் குளோரிடா மேரியை சரமாரியாக குத்தியுள்ளார். அதன்பின் வலிதாங்காமல் சத்தம் போட்டு அலறியதால், அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
இதனை அடுத்து ரத்தக் காயங்களுடன் வெளியே மேரியை அப்பகுதி மக்கள் மன்வயல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் அங்கிருந்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பட்ட பகலில் குழந்தைகளின் கண்முன்னே நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கூடலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.