ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரை மிரட்டி காணொலி வெளியிட்ட நகராட்சி திட்ட அலுவலர்

நீலகிரி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நகராட்சி நல திட்ட அலுவலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிரட்டல் விடுக்கும் நகராட்சி திட்ட அலுவலர்
author img

By

Published : Oct 15, 2019, 3:53 PM IST

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் நகர்ப்புற திட்ட அலுவலராக பணிபுரிந்து வந்தவர் அறிவுடைநம்பி. இவர் கடந்த 30ஆம் தேதி அதேப் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது. இதற்கு அறிவுடைநம்பி கையூட்டு பெற்று கொண்டு சீல் வைக்கப்பட்ட கட்டடத்தை திறக்க அனுமதி வழங்கியுள்ளார். இதையறிந்த பொறுப்பு நகராட்சி ஆணையாளர் நாராயணன் நகர்ப்புற திட்ட அலுவலர் அறிவுடைநம்பியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மிரட்டல் விடுக்கும் நகராட்சி திட்ட அலுவலர்

இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நகர்ப்புற திட்ட அலுவலர் அறிவுடைநம்பி, மது போதையில் சமூக வலைத்தளங்களில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் நாராயணசாமி ஆகிய இருவரையும் மிரட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நகராட்சி ஆணையாளர் என்னை எதுவும் செய்ய முடியாது எனவும், நான் மீண்டும் புதன்கிழமை அன்று பணியில் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையாளருக்கு எதிராக பணியாற்றுவேன் என பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து கூடலூர் பொறுப்பு நகராட்சி ஆணையாளர் நாராயணன் உதகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் டெங்கு அதிகரித்துள்ளது - மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வேதனை

Intro:OotyBody:உதகை 14-10-19
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கூடலூர் நகராட்சி நகர் நல திட்ட அலுவலர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு சமூக வலைத்தளங்களில் மிரட்டல். நகர் நல அலுவலர் மீது உதகை காவல் நிலையத்தில் புகார்.
கூடலூர் நகராட்சியில் நகர்புற திட்ட அலுவலராக பணிபுரிந்து வந்தவர் அறிவுடைநம்பி. இவர் கடந்த 30 ஆம் தேதி அங்குள்ள ஒரு அனுமதி இன்றி கட்டபட்ட கட்டிடத்திற்கு நகராட்சி ஆணையாளர் உத்தரவு படி சீல் வைக்கபட்டது. இந்நிலையில் அறிவுடைநம்பி கையூட்டுப் பெற்றுக்கொண்டு சீல் வைத்த கட்டிடத்தை திறக்க அனுமதி வழங்கியுள்ளார். இதனால் நகராட்சி ஆணையாளர் நாராயணன் நகர்ப்புற திட்ட அலுவலர் அறிவுடைநம்பியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நகர்ப்புற திட்ட அலுவலர் அறிவுடைநம்பி மது போதையில் சமூக வலைத்தளங்களில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் நாராயணசாமி ஆகிய இருவரையும் மிரட்டும் வகையிலும் பேசி அதை ஒளிப்பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நகராட்சி ஆணையாளர் என்னை எதுவும் செய்ய முடியாது எனவும் நான் மீண்டும் புதன்கிழமை அன்று பணியில் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையாளர்க்கு எதிராக பணியாற்ற இருப்பதாக சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் கூடலூர் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூடலூரில் வீட்டு உரிமம் வழங்கி வணிக ரீதியாக பெரிய கட்டிடம் கட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளர் அனுமதி வழங்கியது ஏன் எனவும் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர் மீது கூடலூர் பொறுப்பு நகராட்சி ஆணையாளர் நாராயணன் உதகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.