நீலகிரி: முழு ஊரடங்கையொட்டி நடமாடும் காய்கறி விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. உதகையில் இன்று, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் 240 நடமாடும் காய்கறி விற்பனை வாகனச் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் கட்டாயமாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
மேலும், நடமாடும் வாகனங்களில் விற்பனைக்கு எடுத்து செல்லும் காய்கறிகளை அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட கூடுதலாக விற்பனை செய்பவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஒன்றிய அமைச்சருக்கு தயாநிதி மாறன் கடிதம்