நீலகிரி: குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு சிறுத்தை, கரடி, காட்டு மாடுகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது வன விலங்குகள் வழிதவறி குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம்.
இந்நிலையில், சிறுத்தை பூனைக்குட்டி ஒன்று வழி தவறி குன்னூர் நகருக்குள் வந்துள்ளது. பின்பு அங்கும் இங்கும் அலைந்த சிறுத்தை பூனை எங்கு போவது என தெரியாமல் தனியார் டீ கடைக்குள் புகுந்து தஞ்சமடைந்தது.
தீயணைப்புத் துறையினருக்கு தகவல்
இதைக்கண்ட வாடிக்கையாளர்கள் சிறுத்தைக் குட்டி உள்ளே வந்து விட்டது என நினைத்து அனைவரும் அலறி அடித்து ஓடினர். கடையின் உரிமையாளர் உடனடியாக இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சிறுத்தை பூனைக் குட்டியை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.
இதையும் படிங்க: Viral Video: வால்பாறையில் கேழை ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை!