தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார்.
இதில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரண்டு லட்சத்து 96 ஆயிரத்து 196 பெண் வாக்காளர்கள், இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 48 ஆண் வாக்காளர்கள் என மொத்தம் ஐந்து லட்சத்து 71 ஆயிரத்து 753 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த முறை அதிக அளவு இறப்பு, இடம்பெயர்வால் நான்காயிரத்து 938 வாக்காளர்கள் குறைந்துள்ளனர். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது, “பொதுமக்கள் தற்போது வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா எனச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
தேர்தல் நேரங்களில் தங்களது பெயர் இல்லை என கவலைப்படுவதைத் தவிர்த்து தற்போது நடைபெறும் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம்கள் மூலம் வாக்காளர்கள் தங்களது பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தர்மபுரி வாக்காளர் பட்டியல் - மொத்தம் 12 லட்சத்து 35 ஆயிரத்து 534 வாக்காளர்கள்!