நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜூன் 29) இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. குறிப்பாக கேத்தி, எடப்பள்ளி, அருவங்காடு, வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குன்னூரின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பர்லியார் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இதேபோல் கரன்சி தடுப்பணை, ஜிம்கானா தடுப்பணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.