நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பங்களாவில் 2017ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை, கொள்ளை வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
கரோனா ஊரடங்கால் மூன்று மாத காலம் வழக்கு விசாரணை நிறுத்திவைக்கபட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 21ஆம் தேதிமுதல் மீண்டும் விசாரணை தொடங்கியது. இதற்கிடையே வழக்கு விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே கரோனா ஊரடங்கிற்கு பின் வழக்கு விசாரணை தொடங்கியபோதும் வழக்கில் தொடர்புடைய திபு விசாரணைக்கு தொடர்ந்து வராமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
அதனால் திபுவிற்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அவரை ஐந்து தனிப்படை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், திபு இன்று (செப். 23) உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதற்கிடையே இன்றைய வழக்கு விசாரணையில் சயான், வளையாறு மனோஜ் உள்பட ஒன்பது பேரும் ஆஜராகினர். இதனிடையே வழக்கில் தொடர்புடைய மூன்று பேரிடம் சாட்சி விசாரணை நடத்தபட்டது. பின்னர் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க...மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி: சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்