நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியில் பலாப்பழம் சீசன் ஆரம்பிப்பதால் காட்டு யானைகள் பலாப்பழங்களை உண்பதற்காக குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன.
பயிரிடப்பட்டுள்ள பலா, வாழை, மா மரங்கள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அதற்காக அப்பகுதியிலேயே பல நாட்கள் யானைகள் முகாமிட்டு விடுவதாகவும், இதற்காக சாலைப் பகுதிகளை கடக்கும் யானைகளை கண்டு வாகன ஓட்டிகள் பெரும் அச்சம் கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் யானைகள் வருவதை தடுப்பதற்கு வனத் துறையினர் பர்லியார் பகுதியில் உள்ள அனைத்து பலா மரங்களையும் வெட்டி அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் மேட்டுப்பாளையம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.