நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கஞ்சா செடிகள் அழிப்பு
இந்நிலையில் குன்னூர் உலிக்கல் பகுதியில் போலீசார நடத்திய சோதனையில், இதய கணேஷ் என்ற இளைஞர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவ்லதுறையினர், அதில் தொடர்புடைய சரண், லோகநாதன், அபிலாஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, நான்கு பேரும் குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.