நீலகிரி மாவட்டத்தில் 37 நாள்களுக்குப் பிறகு கடந்த 15ஆம் தேதி மூன்று பேருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று இருப்பது உறுதிசெய்யபட்டது. இதில் உதகை அருகே உள்ள கப்பச்சி, குளிச்சோலை கிராமத்தில் தலா ஒருவருக்கும், குன்னூர் அருகே உள்ள தைமலை கிராமத்தில் ஒருவருக்கும் தீநுண்மி தொற்று உறுதிசெய்யபட்டது.
இந்நிலையில் இந்தக் கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று (ஜூன் 17) ஆய்வுமேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் குறித்து பொதுமக்கள் 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
குன்னூரில் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோவை திரும்பிச்சென்ற ஒருவருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், மாவட்டத்தில் இதுவரை 9,752 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் அதிக பரிசோதனை செய்யும் மாவட்டத்தில் ஆறாவது இடத்தில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...சொந்த ஊர் வந்தடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல்!